Monday, August 12, 2019

அழியாதவன்





அன்புள்ள ஜெ,

துரியோதனன் மண்ணில் புதைந்து போகிறான். மண்மேடாக ஆகிறான். மறுபக்கம் அவனுடைய அந்தச்சிலை மண்ணைக் கிழித்து வெளியே வருகிறது. இந்த இரண்டு இமேஜ்களும் ஒன்றையொன்று நிரப்பி ஆழமான பொருளை அளித்தன. துரியோதனன் மறையலாம். அவனுடைய வடிவம் எப்போதும் அழியாமல் இருந்துகொண்டேதான் இருக்கும். துரியோதனனைக் கொன்ற பீமனால் அந்த வடிவத்தைக் கொல்லமுடியாது. அவன் அதை விட்டு தப்பி ஓடத்தான் வேண்டும். அந்த மூர்க்கம்தான் கடைசியில் எஞ்சியது. குருக்ஷேத்திரத்தில் எது மிச்சம் என்றால் அந்த கண்மூடித்தனமான வெறி மட்டும்தான். அது மட்டும்தான் அங்கே நின்று எதிரி எங்கே என்று தேடுகிறது. அந்தியின் கருமையில் நிழலுருவாக குருசேத்திரத்தில் நின்றிருக்கும் அந்தச்சிலையின் வடிவம் ஒரு மாபெரும் சினிமாக்காட்சிபோல இருக்கிறது. வெண்முரசின் உச்சகட்ட இமேஜ் என்றால் இதுதான்

ராதாகிருஷ்ணன்