Tuesday, August 13, 2019

அந்தச் சிலை




அன்புள்ள ஜெ

துரியோதனனின் அந்தச் சிலை பல வடிவங்களில் மாறி மாறித்தோற்றம்கொள்கிறது. அது பீமனாக இருக்கிறது. பீமன் பார்வையில் துரியோதனன் ஆகவும் பீமன் ஆகவும் தெரிகிறது. ரகசியமாக அது திருதராஷ்டிரர் ஆகவும் தெரிகிறது. இன்றைய அத்தியாயத்தில் அந்தச்சிலை களத்தில் கைவிரித்து நிற்கும்போது அதற்குப் பார்வையில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் அசைவுகள் திருதராஷ்டிரர்போலவே உள்ளன. திருதராஷ்டிரரின் கண்ணில்லாத தன்மை என்பது ஒருவகையான குருட்டுவேகம் என்றும் அது குறியிடாகவே அப்படி சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்வார்கள். அப்படிப்பார்த்தால் மொத்தக் குருக்ஷேத்திரமே திருதராஷ்டிரரின் மூர்க்கமான குருட்டுத்தனத்தின் விளைவுதான். ஆகவேதான் அது இவ்வாறு எஞ்சியிருக்கிறது. கடைசியில் மிஞ்சியது அந்தக்குருட்டுத்தனம் மட்டும்தான் என்று சொல்லலாம். அந்த போர்க்களத்தில் பீமன் கடைசியாக திருதராஷ்டிரரிடம் போரிட்டுக்கொண்டிருப்பது ஒரு பெரிய குறியீட்டுக்காட்சி

ஜெ.ராஜ்குமார்