திரௌபதியின் முன் அர்ஜுனனைப் போல் பீமனைப் போல் வென்றவனாய் தருக்கி நிற்க காலம் அவனுக்களித்த ஒரு வாய்ப்பு. இது வரையிலும் தருமன் அடைந்தது எல்லாமே அவன் தம்பியரின் தசையின் விசையினாலேதான். இப்பன்னிருப் படைக்களமே தருமன் தனி நாயகனாய் வெல்லக் கூடிய இடம். இதில் மட்டும் அவன் வென்றால், திரௌபதியின் முன் ஆணாக, தன் தம்பியரை விட ஒரு படி அதிகம் சாதித்தவனாக, சற்றேனும் கொடுப்பவனாக இருக்கக் கூடும் அல்லவா?
அன்புடன் ,
இரா. தேவர்பிரான்