ஜெ
ஒருவாசகர் துரியோதனனின் மனநிலை மக்களுக்கும் வந்ததைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். அதை நான் முன்னரே கவனித்திருந்தாலும் கூட ஒரு கடிதமாக வாசித்தபோதுதான் கூர்மையாகபதிந்தது
அப்போது ஒன்று ஞாபகம் வந்தது. அந்த நகர்முழுக்க ஒரு நோய் வருகிறது. காகங்களால். அதாவது கலியின் வாகனத்தால். அத்தனைபேரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தனைபேரும் நிலைமறந்து கிறுக்காக அலைகிறார்கள்
ஆனால் அவர்களில் இருந்து அது அப்படியே துரியோதனனுக்குள் சென்றுவிடுகிறது. அந்த கரிய நிழல்பறவைகள்தான் இப்போது அவனிடமிருந்து கிளம்பி அஸ்தினபுரியின் மக்கள் மேல் பரவியிருக்கின்றன
அந்த நகரமே நோய்கொண்டிருக்கிறது, உள்ளூர நோய் வந்துவிட்டது என்பது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. அஸ்தினபுரியில் பரவும் அந்த விஷம் எதைக்குறிக்கிறது என எனக்குப்புரியவில்லை. கடைசியில் சபையில் மக்கள் பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதை ஆதரிப்பதை பார்த்ததும் புரிந்துகொண்டென். இதற்காகவே அங்கே அதை எழுதிச்சேர்த்திருக்கிறீர்கள் என்று
குமார் சுப்ரமணியம்