ஜெ,
சொல்வளர்காடு சூட்சுமமாக புரிந்துகொள்ளத்தக்கது. அதில் ஒரு குரோனாலஜிக்கல் வளர்ச்சி இல்லை. சிந்தனையில் அப்படி ஒன்று இருக்கமுடியாதுதான். சைக்கிளிக்கல்தான் இருக்கிறது. அதுதான் குழப்புகிறது
1. தொழில்செய்யும் வைதிகர். அவர்களுக்கு சொல்தான் முக்கியம். பொருள் அல்ல. அவர்கள் சொல்லை நிலைநிறுத்தும் முறைகளை உருவாக்குகிறார்கள்
2 ஞானவாதிகளான வைதிகர். அவர்கள் வேதங்களை விளக்குகிறார்கள்
3 சொல்லை வழிபடுபவர்கள் ஞானத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் கடைசியில் ஞானத்தைக் கண்டுகொள்கிறார்கள்
4 ஞானத்தை வழிபடுபவர்கள் ஞானத்தின் எல்லையை அறிந்து சொல்லை வழிபடுபவர்களின் காலடியில் அமர்கிறார்கள்
கடைசியில் உத்தாலகரிடம் ஸ்வேதகேது செல்வதுதான் உச்சம். முழுக்க வாசித்தபின் திரும்ப ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டேன்
எஸ்.சிவக்குமார்