ஜெ,
சுனகக் காட்டிலிருந்து எழுந்த வேதம் நாயின் ஒலியுடன் இணையும் இடம் அபாரமானது. வைதிகர்கள் கேட்டால் கொந்தளிப்பார்கள். வேதத்தை நாய்க்குரல் என்று சொல்லிவிட்டார் என்று. ஆனால் தொன்மையான வேதங்கள் ஒலிகளில் இருந்து எழுந்தன என்பதற்கு அதுதான் அர்த்தம் என நினைக்கிறேன்.
சௌனககுருகுலத்தின் காத்யயானர் தன் சீடர்களுடன் அமர்ந்து பாஞ்சாலியின் கதையைக் கேட்கும் இடம் நுட்பமானது. மனதை இந்த அளவுக்கு சமீபத்திலே ஒரு இடம் கனவிலே ஆழ்த்தியதில்லை. அப்படிப்பட்ட ஒரு குருகுலத்தில் அமர்ந்து படிக்கவேண்டும் என்று மனம் ஏங்குகிறது
ராஜன்