Tuesday, July 19, 2016

வீரம்


  


ஜெ, 

வீரம் என்பதை வெண்முரசு இருவகையில் விளக்கிக்கொண்டே செல்கிறது என நினைக்கிறேன்.மூர்க்கமான உடல்வீரம் ஒரு பக்கம். அது ஆசைகளாலும் ஆணவத்தாலும் வஞ்சங்களாலும் கொண்டுசெல்லப்படுகிறது. கர்ணன் கூட அந்தவகையானவன் தான். அவனுக்கு அதற்கான நியாயங்கள் இருந்தன, அவ்வளவுதான்

ஆனால் தனக்கென ஏதுமில்லாத வீரமே ஒரு படி மேலானது. அது அர்ஜுனனிடமும் பீமனிடமும் இருக்கிறது. அர்ஜுனனைவிட அதிலே மேலானவர் தீர்த்தங்காரர். ஆகவேதான் அர்ஜுனன் அவருடன் தன்னை அடையாளம் காண்கிறான்.
 


அர்ஜுனனுக்கும் தீர்த்தங்காரருக்குமான உறவை நுட்பமாக பலமுறை வாசிக்கவேண்டியிருக்கிறது.வில்வித்தை வழியாக அவன் சென்று அடையவிரும்பும் இடம் அதுதான் என நினைக்கிறேன்

அர்விந்த்