அன்புள்ள ஜெ,
பீமனுடன் பாஞ்சாலி தேரில் செல்லும் காட்சியை வாசித்தேன். உச்சகட்ட காமச்சுவைக் காட்சி என்று தோன்றியது. காமச்சுவை காவியத்திலே முக்கியமானது,. கம்பனில் நாம் அதை நிறையவே காண்கிறோம்
என்ன பிரச்சினை என்றால் யதார்த்தமாக எழுதப்படும் காமச்சுவைக் காட்சிகளுக்கு இருக்கும் அதிர்ச்சிமதிப்பு இவற்றுக்கு இல்லை. படபடப்பு உருவாவது கிடையாது. கொஞ்சம் போனதும் கற்பனையிலே விரியும்போதுதான் அந்தப்படபடப்பு வருகிறது
இப்போதெல்லாம் இந்த நவீன வகையான பாலுணர்வு விஷயங்கள் சாதாரணமாகவே நிறைய வாசிக்கக்கிடைக்கின்றன. அவற்றை வாசித்துப் பழகிவிட்டதனால் பெரிதாகத் தோன்றுவதே இல்லை
அந்த மனநிலையில் மிகநுட்பமாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இந்தப்பாலியல்விஷயம் பெரிய அளவில் கற்பனையைத்தூண்டி பரவசத்தை அளிக்கிறது. தேர் பாலுறவின் அசைவாக ஆகிறது. அவர்கள் இருவருக்கும் வரும் அந்த உச்சம் நுட்பமாக உடல்வர்ணனைகள் வழியாகச் சொல்லப்பட்டுள்ளது
வெய்யோன் அற்புதமாகச் செல்கிறது’
கேசவன்