Tuesday, July 26, 2016

வெண்முரசு-ஒரு சிறு அறிமுகம்

 
 
அன்புள்ள ஜெயமோகன்,
 
                    நான் எழுதிய "வெண்முரசு ஒரு சிறு அறிமுகம்" என்ற கட்டுரை என் குரலிலேயே பதிவு செய்யப்பட்டு 17-07 -2016 அன்று ஆஸ்திரேலிய எஃப்.எம் வானொலியில் ஒலிபரப்பப் பட்டது.அதன் வரி வடிவம் தங்கள் பார்வைக்கு.
 
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி   
 
 
                     வெண்முரசு-ஒரு சிறு அறிமுகம்
 
-
               தமிழ் இலக்கியத்தை செம்மைப் படுத்திய,செழுமைப் படுத்திய அற்புத ஆளுமைகள் பலர்.பாரதி,புதுமைப் பித்தன்,க.நா.சு.,கி.ராஜ நாராயணன்,தி.ஜானகிராமன்,சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் என்னும் வரிசை தொடர்ந்து செல்கிறது.அதில் இன்று முழுமையான படைப்
பூக்கத்துடன் இலக்கியத்தின் பல துறைகளில் இதுவரை எவரும் எட்டாத உச்சங்களை தொட்டு பிரமாண்டமான படைப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருபவர் ஜெயமோகன்.அவருடைய வெண்முரசு தமிழில் ஒரு புதிய பாய்ச்சல்.
 
                ஜெயமோகனின் முதல் நாவல் 'ரப்பர்" 1990-ல்வெளி வந்தது .அகிலன் விருது பெற்றது.பின்னரே வெளியீடு.வணிக எழுத்துக்களே இலக்கியம் என்று நிணைத்துக் கொண்டிருந்த ,திளைத்துக் கொண்டிருந்த தமிழுலகம் அதிர்ந்து போய் "யார் இவர்?" என்று திரும்பிப் பார்த்தது.
 
 
               பின்னர் வெளி வந்த விஷ்ணுபுரம்,பின் தொடரும் நிழலின் குரல்,கொற்றவை  போன்ற நாவல்கள் தமிழ் இலக்கிய உலகைப் புரட்டிப் போட்டது. தமிழின் முகமும் மாறியது:முகவரியும்
மாறியது.
 
              நாவல்கள் ,சிறுகதைகள்,திறனாய்வு,பயண நூல்கள்,அறிவியல் புணைவுகள்,கட்டுரைகள்,மேடை உரைகள்,அரசியல்-சமூக விமர்சனங்கள்,திரையுலக பங்களிப்புகள் என்று ஜெயமோகனின்
எழுது கோல் தொடாத பகுதிகள் இல்லை.ஜெயமோகன்.இன் என்ற அவருடைய இணைய தளம் மூலம் அவருடைய உலகளாவிய பங்களிப்புகள் விரிந்தன.
 
               விருதுடன் தன் கணக்கைத் தொடங்கிய ஜெயமோகன் விருதுகளை வழங்கும் தளத்துக்கு உயர்ந்தார்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலம் தரம் வாய்ந்த இலக்கிய ஆளுமைகளுக்கு ஒவ்வொரு
ஆண்டும் விருதுகள் வழங்கப் படுகின்றன.
 
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் ஜெயமோகன் தொடங்கிய பிரமாண்ட இலக்கியப் பணிதான் வெண்முரசு,.மகாபாரதம் என்ற மகா காவியத்தை வியாசர் இயற்றினார்.மகாபாரதம் அதற்குப்பின் பல மொழிகளில் பல இலக்கிய விற்பன்னர்களால்  மறு ஆக்கம் செய்யப் பட்டிருக்கிறது..  
 
மகாபாரதத்தை ஜெயமோகன் தமிழில் ஒரு நீண்ட நாவல் வரிசையாக மறு ஆக்கம் செய்கிறார்.
வெண்முரசு என்ற பெயரில் தன் jeyamohan.in என்ற இணைய தளத்தில் தினம் ஒரு அத்தியாயம் வீதம் தொடர்ந்து எழுதி வெளியிடுகிறார்.2014 ஜனவரி 1 முதல் இது தொடர்ந்து வெளிவருகிறது.
 
இது வரைமுதற்கனல்,மழைப் பாடல்,வண்ணக்டல்,நீலம்,பிரயாகை,வெண்முகில் நகரம்,இந்திர நீலம்,காண்டீபம்வெய்யோன் ,பன்னிரு படைக்களம் என்று பத்து நூல்கள் வெளியாகி உள்ளன.வெண்முரசின் இன்னும்பிறக்காத அடுத்த நூலின் பெயர் சொல் வளர் காடு.சுமார் 20 நாவல்கள் உருவாகும் என்பது திட்டம்
.               
வெண்முரசு என்பது மகாபாரதக் கதையை அப்படியே திரும்பச் சொல்லும் முயற்சி அல்ல மகாபாரதத்தை இன்றைய நவீன இளைஞனுக்கு பயனுள்ள வகையில் வாழ்வியல் தரிசனங்களைப்பெற உதவும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு.
              
வெண்முரசு ஆழமான உளவியல் அலசல்கள் நிரம்பிய ஒரு செவ்வியல் நூல் வரிசை.ஒரு செவ்வியலில் எல்லா இலக்கிய வகைகளும் இருக்கும்.வரலாறு,தத்துவம்,அரசியல் சமூக இயங்கியல்,
 
உளவியல் சிக்கல்கள்,கவிதா தரிசனங்கள்,அங்கதம் இன்னும் ஏராளம் உண்டு                          வியாசரின் கைகளில் ஒரு சில வரிகளில் எழுதப் பெற்ற பாத்திரப்  டைப்புகள்சில ஜெயமோகனின்விரல்களில்பலஅத்தியாயங்களில் , ஏன்,ஒரு முழு நூலில் கூட விரியும்அரசர்களின் வாழ்க்கை மட்டுமல்ல,சாமாநிய மக்களின் வாழ்க்கையும் விரிவான சித்திரங்களா
 
 நமக்கு கிடைக்கின்றன.மன்னர்களின் கம்பீரமான,விறைப்பான,புற வாழ்க்கை மட்டுஅந்தரங்கமான ,எளிய நிகழ்ச்சிகள் கூட எதார்த்தத்துடன் விவரிக்கப் படுகின்றன துரியோதனனும்,அவரது தம்பிகளும் எவ்வளவு எளிய உணவுப் பிரியர்கள் என்பதை
அவர்தம் உண்டாட்டுகளை விளக்கும் போது அவர்கள் இளவரசர்கள் இல்லை ரத்தமும்சதையும் கொண்ட சாதாரண மனிதர்கள்.
 

  இயன்றவரைதூயதமிழ்ச்சொற்களேபயன்படுத்தப்பட்டுள்ளன
.முன் எப்போதும்நாம் அறிந்திராத பல புதிய சொற்கள் இலகுவாக கையாளப்பட்டுள்ளன.ஏராளமான பலபுதிசொற்களும்,சொற்பிரயோகங்களும்,சொற்சேர்க்கைகளும் ஜெயமோகன் பயண்படுத்தி
உள்ளார்.ஊழ்கம்,அரசு சூழ்தல்,சுடராட்டு,கொலையாட்டு என்று அவற்றை பட்டியலிட்டால்அதுவே ஒரு நூலாக விரியும்.தமிழுக்கு வளம் சேர்க்கும் வெண்முரசை  தொடர்ந்து பயில்பவர்களின் மொழியறிவும்,சொல் வளமும் பெரிதும் மேம்படும்..
                         
 
வெண்முரசின் குறைகளாக சிலவற்றை குறிப்பிடுவார்கள்.சில தேவையற்றவிளக்கங்கள்,விவரிப்புகள்,பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்வது,மொழி நடை சிலஅத்தியாயங்களில் சற்று சிரமமாகவும்,நீலம் என்ற நூலில் பயங்கர சிரமமாகவும் இருப்பதுமுக்கியத்துவமே இல்லாதது என்று கருதப்பட்ட சில பாத்திரங்களுக்கு அதீத முக்கியத்துவம்அளிப்பது என்று.
                  
மொழி நடை சிரமம் என்பது உண்மைதான்.ஆணால் சிறிது முயற்சியுடன் சிலஅத்தியாயங்களைத் தாக்குப் பிடித்து கடந்து விட்டால் ஜெயமோகனின் மொழி நடை நமக்குப்பழகிப் போய்விடும்.எளிதாகி விடும்.எல்லாமே பழக்கம்தான்.சிறிதளவு பயிற்சியோ,முயற்சியோஇல்லாமல் எந்த உயர்ந்த விஷயமும் நமக்கு வசப்பட்டு விடாது.ஜெயமோகனின் மொழி நடைஅதுவும் குறிப்பாக வெண்முரசு மொழி நடைசெறிவானது,பல தளங்க ளை,பல அடுக்குகளை நுட்பங்களை ,ஆழ் படிமங்களைக் கொண்டது.குறிப்பாக நீலம் எளிய வாசகர்களுக்கு மிகவும் கடினமானது என்பது உண்மையே! பற்கள் உடை படுமானால் "சரி ,இது இப்போது நமக்கானதல்லஎன்று கடந்து செல்ல வேண்டியதுதான்.திரும்பத் திரும்ப பயில்வோருக்கு மட்டுமே நீலம் தன்னை வெளிக்காட்டும்.
              
 
 வணிக எழுத்து நம்மை எளியவர்களாக,நொய்மை  மிகுந்தவர்களாக,தடுப்பாற்றல் இல்லாதவர்களாக ஆக்கி வைத்துள்ளது.நல்ல இலக்கியத்தை மட்டுமல்ல நல்ல நகைச்சுவையை ரசிப்பதற்குக் கூட சிறிது பயிற்சி வேண்டும்.வாசகன் சிறிது உழைக்க வேண்டும்.
                 
அனுபவிக்க ஆர்வமிருந்தால் வெண்முரசு ஒரு புதையல், ஒரு பொக்கிஷம்! ஜெயமோகனுக்குநாம் சொல்ல வேண்டியது -பாராட்டல்ல;நன்றி!