ஜெ
சற்றுமுன்பாகத்தான் மழைப்பாடலில் கூந்தல்பனையைப்பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். அதைத்தேடிப்போகும் காந்தாரகுலப்பெண்கள் அதைக் கண்டடைவதைப்பற்றி அதுக்கு கல்யாணத்திலே உள்ள இடம் எல்லாம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் வெய்யோனில் காந்தாரியின் ஆயிரம்பேரப்பிள்ளைகளைப்பற்றிய இடம் நினைவில் வந்தது
அது பாலைவனத்து மரம். பலமடங்கு வீரியமான மகரந்தம் உள்ளது. அதுதான் காந்தாரி. அவளுடைய குலமே அப்படிப்பட்டதுதான். அது மழைச்செழிப்புள்ள நிலத்துக்கு வந்ததும் ஆயிரம்மேனியாக விளைகிறது. அதுதான் அந்தப்படிமம். ஆரம்பத்திலே அது ஒரு அழகான பாலைவன உவமை என்றுதான் இருந்தது. வெய்யோனுடன் இணைக்கும்போதுதான் அதன் வீச்சு புரிந்தது
ஆரம்பத்திலேயே இந்தவகையான மனஓவியங்கள் உங்கள் மனசுக்குள்ளே இருந்தன என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள்தான்
பிரபாகர்