ஜெ
உத்தாலகர் ஸ்வேதகேதுவின் அம்மாவை தானம்செய்த கதை முன்பே முதற்கனலில் வந்துவிட்டது. அதில் வியாசர் அதை சொல்கிறார். அதற்கு புதியுகம் பிறபதன் அடையாளம் அது என சுகர் பதில் சொன்னார் என்று வியாசர் சொல்கிறார். அந்தப்புதுயுகத்தைப்பற்றித்தான் வெண்முரசு பேசுகிறது என்பதை முதல்நாவலே தெளிவாகச் சொல்லிவிட்டது
ஆனால் அப்போது அது transient ஆக கடந்துபோய்விட்டது. இப்போது இத்தனை விரிவான களத்திலே அந்தக்கதையைப்பார்க்கும்போதுதான் அது எவ்வளவு பெரிய தொடக்கம் என்று தெரிகிறது. கிருஷ்ணன் என்னும் தத்துவஞானி எதன் தொடர்ச்சியாக வந்து நின்றிருக்கிறான் என்பதைக் காணமுடிகிறது
ஸ்வேதகேதுவே நியோகத்தால் பிறந்தவர் என்பதுதான் அவரது செயலுக்கான காரணம். அப்படிப்பார்த்தால் மகபாரதம் இரண்டு வேறுவேறு காலகட்டங்களுக்கு நடுவே நின்றுகொண்டிருப்பது தெரிகிறது
மகாதேவன்