ஜெ
நேற்று கடிதங்கள் பகுதியில் இந்திரநீலம் பற்றி எழுதப்பட்டிருப்பதை வாசித்தேன். இன்னொரு விஷயமும் சொல்லப்படவேண்டும். சியமந்தகம் கிருஷ்ணனின் லீலாவடிவம் தான் என்று கடைசியில் வருகிறது. அந்த தரிசனம் ஆரம்பத்திலேயே இருக்கையில் மீண்டும் வாசிக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிய அர்த்தம் வருகிறது
சாத்யகி சியமந்தகத்தால் கவரப்பட்டபோது முதலில் ஒரு ஏமாற்றம் வந்தது. ஆனால் அது கிருஷ்ணனின் உலகியல்தோற்றமே என்னும்போது அந்த ஏமாற்றம் மறைந்துவிட்டது. கிருஷ்ணன் என்னும் அரசனையும் , துவாரகையின் பிரம்மாண்டத்தையும் கண்டு அங்கே வந்தவன் தானே அவன்? ஒவ்வொருவரும் கொள்ளும் மயக்கம் ஒவ்வொரு வகையாக இருக்கிறது
கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை மட்டுமே பார்த்த காளிந்தியின் மனம் வேறுநிலையில் இருக்கிறது
ஜெயராமன்