Monday, July 18, 2016

காமமும் வன்முறையும் காண்டீபமும்



ஜெ

காண்டீபம் எனக்குப்பிடித்தமான நாவல். அதைப்பற்றிய பேச்சுக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. கடிதத்திலே சொல்லப்பட்டிருப்பதுபோல அது காமம் பற்றிய நாவல் அல்ல. காமம் குரோதம் இரண்டைப்பற்றிய நாவல்

முதல்பகுதிபெரும்பாலும் காமம் பற்றித்தான். ஆனால் காமத்தை அர்ஜுனன் முழுவடிவில் அந்த மலையேற்றத்தில் பொய்கைகளின் கரையிலே கண்டுவிடுகிறான். அதன்பின்னர் கடமைக்காகத்தான் சுபத்திரையை மணக்கிறான். காமத்தின் அலைக்கழிப்பு அணைந்தபிறகு அவன் அடையும்பெண் அவள்

ஆனால் அதன்பின் வன்முறை அவனில் இருக்கிறது. அது தீர்த்தங்காரரை முழுவடிவிலே உணரும்போதுதான் அமைதியடைகிறது. வன்முறையை கடந்தபின்னர்தான் அவனால் முழுவீரனாக ஆகமுடிகிறது

தன் காண்டீபத்தை அவன் சுருட்டிச் சிறிதாக ஆக்கி ஒரு விளையாட்டுப்பொருளாகக் கையாள்வது மிக நுணுக்கமான ஒரு உச்சக்கட்டம்

நன்றி


விஜயகுமார்