Thursday, July 28, 2016

பலிமேடை



ஜெ

நேற்று ஒரு கடிதத்தில் வெண்முரசின் வரி ஒன்று மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. எனக்கு அதற்கு அடுத்தபடியாக வருவது மேலும் முக்கியமான வரி என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு ஒரு புராப்பஸியின் அமைதி இருக்கிறது.

காலத்தில் நின்று முழங்கும் சொற்களைச் சொல்லவேண்டும் என்னும் பேரவாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் கவிஞர்களும் அரசர்களும். காலம் என்பது நாம் ஒருபோதும் முற்றறிய முடியாத பெரும்பெருக்கு… தாங்கள் சொன்ன சொற்களைப் பற்றிக்கொண்டு அதில் நின்று அழிகிறார்கள். அவர்களின் அழிவாலேயே அவர்களின் சொற்கள் நினைக்கப்படுகின்றன…”

சட்டென்று நாவலுக்கு வெளியே போய்விட்டேன். பலகோணங்களில் சரித்திரநாயகர்களைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். சாக்ரடீஸ் முதல் காந்தி வரை

ஜெயபாலன்