ஜெ’
சொல்வளர் காடு நாவலை பற்றிய அறிமுக குறிப்பை படிக்கும்போதே , இந்நூல் என் பிரியத்திற்குரியதாக இருக்கும் என நினைத்தேன் .
நேற்று படித்தேன் , என் அறிதலுக்கு மீறிய விசயங்களாக தோன்றின , ஏனோ' பொறு ' என மனம் சொன்னது . இன்றய பதிவை படித்தேன் . ..... :)
இன்றயப்பதிவு பதிவு படிக்கும்போது சுகனும் , அதுநீயே பதிவும் மனதில் இருந்தது .
ஆசிரியர் உத்தாலகரா இல்ல சுவேதகேதுவா னு கடைசி வரையும் குழம்பிட்டு இருந்தேன் .
இன்னும் விசும்பு ற்கான அர்த்தம் புரியல , கூடிய சீக்கிரம் கண்டுகொள்வேன் .
ஆருணி , வயல் , அதுநீயே - இந்த மூன்றிற்கும் ஒரு இணைப்பு உண்டென இப்போதைக்கு மங்கலாக புரிகிறது :)
நன்றி ஜெ .
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதா
இந்நாவலில் ஏற்கனவே எழுதப்பட்ட பல நூல்கள் மேலதிகக் குறிப்புகளாக உள்ளன. அவற்றையும் இணையத்தில் வாசித்துக்கொண்டால் இந்த அத்தியாயத்தை முழுமையாகப்புரிந்துகொள்ளலாம்
ஜெ
சாந்தோக்கிய உபநிடதம்
பிராமணங்கள்
ஆரண்யகங்கள்