அன்புள்ள ஜெமோ
அவர்களுக்கு,
வணக்கம்,”சொல்வளர்காடு”
வெண்முரசு நாவல் வரிசையில் தனி சிறப்பிடம் பிடிக்கும் என்றே எண்ணுகின்றேன்,மீண்டும்
மீண்டும் வாசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது,உத்தாலகர்-ஸ்வேதகே து,தந்தை சொல்லால்
உயரத்தைதொட்டவர்,மகன் பொருளால் உச்சத்தைதொட்டவர்,வேதம் கற்ற இருவருமே,பாஞ்சால
மன்னனிடம் மாணவர்களாய் செல்வது அக்கதையின் உச்சம்,உத்தாலகர் வயலின் கரையை
அடைப்பதன் மூலம் உடலில் சேற்றைகொண்டார்,ஸ்வேதகேது கரையை உடைப்பதன் மூலம் உடலில் சேற்றைக்கொண்டார்,வழி
பலவாக இருந்தாலும் கடைசியில் வந்து சேரும் இடம் ஒன்றுதான்.
வேதத்தில் உள்ள
கர்மகாண்டத்திற்கும்,ஞானகாண்டத் திற்குமான யுத்தமென்று இதை கொள்ளமா?
பகடையாட்டதிற்கு
பின் தருமன் தன் தம்பியரைருடனான சந்திப்பு படிக்கும் போது கண்கள் தானாகவே கலங்கின,அதிலும்
தருமன்- பீமனை தழுவிக்கொள்ளும் காட்சி,அடுத்தது காத்தியானரின் உபதேசம் “மனிதன்
தான் விரும்பியதையே அடைகிறான்”:”தேர்ந்த குகன் புயல் வரவேண்டும் என கோருகிறான்,திறமையான் சூதன் திமிறும் குதிரையே
நாடுகிறான் “தவம் செய்பவனை நோக்கியே மாரன் அம்புத்தொடுக்கிறான்,இந்திரன் படைகளும்
அவனுக்கு எதிராகவே எழுகிறது”போன்ற வரிகளுக்கு உங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன்
இப்படிக்கு
குணசேகரன்