ஜெ
உத்தாலகர்- ஸ்வேதகேது கதை பிரபலமானது. சாந்தோக்கிய
உபநிஷதத்தின் தொடக்கம் அதுதான். என் குருகுலத்தில் யோகமுறையில் அதை கற்பிப்பார்கள்.
உத்தாலகர் கதைக்கு இன்னொரு வடிவம் உண்டு என்பதை நான் முதற்கனலில் இக்கதை வரும்போதுதான்
வாசித்தேன். அப்போது உடனே சென்று உத்தாலகர், ஸ்வேதகேது பற்றி வாசித்தேன். அத்தனை தகவல்களும்
முரண்ட்பட்டிருந்தன
உத்தாலகர் ஸ்வேதகேதுவை பிராமணர்களை அவமதித்தார் என்று
சொல்லி துரத்திவிட்டார் என்று வருகிறது. ஸ்வேதகேது ஆரண்யகங்களை எழுதினார் என்று வருகிறது.
காமநூல் எழுதினார் என்பது இன்னொரு தகவல். உத்தாலகர் தன் குருவை நிறைவுசெய்ய வயலில்
வரம்பாக கிடந்தார் என்பது இன்னொரு கதை. உத்தாலகருடைய ஆசிரியரின் இன்னொரு மாணவன் மாடுமேய்த்தான்
என்பது ஒருதகவல்.
உத்தாலகரும் ஸ்வேதகேதுவும் சேர்ந்து போய் பாஞ்சால
அரசனிடம் தோற்று ஞானநூல் கற்றார்கள் என்பது இன்னொரு கதை. இந்தக்கதைகளுக்குள் தொடர்பே
இல்லை. முரண்பாடுகளே உள்ளன.
எல்லா தகவல்களையும் ஒன்றாகச்சேர்த்து ஒரே கதையாக
வெண்முரசிலே வாசித்தபோது ஆச்சரியம். கடைசியாக நேரடியாக சாந்தோக்கிய உபநிஷத வரிகளில்
சென்று முடிந்தபோது ஒரு சிலிர்ப்பே வந்தது
மனோகரன்