Monday, July 25, 2016

காட்சி



வெண்முரசு மட்டுமல்லாது ஜெ அவர்களின் எல்லா படைப்புகளுமே காட்சிப்படுத்தலின் உச்சங்கள். கதையை படிப்பது போல எப்போதும் உணர்ந்ததே இல்லை. அந்த கதைக்குளேயே கதா மாந்தர்களாக நாமும் மாறிக்கொண்டே இருப்போம் படிக்கயில்.காட்சி விவரிப்புகள் நம்மை அந்த அனுபவங்களுக்கே நேரடியாக கூட்டிக்கொண்டு போகிறது. ஒரு திரைப்படம் பார்ப்பது போலவும் அதில் நாமும் பங்கு பெற்ரிருப்பது போலவும் தான் ஒவ்வொரு பத்தியையும் படிக்கிறோம்.

நான் என் மகன்களுக்கு வெண்முரசை கணிணித்திரையிலிருந்து வரி வரியாக சொல்லி கொண்டிருப்பேன் எதாவது காரணத்தால் சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு வீட்டு வேலைகளை கவனிக்க எழுந்திரிக்கும் போது என் மகன்கள் அவர்களை அறியாமல் கணிணியின்  pass button  அழுத்தி விடுவார்கள் . வரி வரியாக தெரியும் ஒரு கதையை அல்ல அவர்கள்  கேட்டுக்கொண்டிருந்தது  அந்த கதாவெளியில் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த , பங்கெடுத்துக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தை பாதியில் நிறுத்துவத்து போலவே இருக்கும்   அந்த இடைவெளி. வெண்முரசை அத்தனை தத்ரூபமாகவே கேட்கிறொம் படிக்கிறோம் உணர்கிறோம்