Monday, July 25, 2016

மக்களின் மனநிலை



ஜெ,

வெண்முரசின் நாவல்களில் வரும் சாமானியர்களி குணச்சித்திரங்கள் முக்கியமானவை. சிலசமயம் அவை கதையை வெளியே கொண்டுசெல்கின்றன. அனாலும் அவை ஆழமாக மனதில் நிற்கின்றன. ஏனென்றால் மகாபாரதம் ஒரு சரித்திரம். பின்னார் அது புராணமாக ஆகியது. அதில் சாமானியர்களே இல்லை

சாமானியர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியமனா கேள்வி. பாஞ்சாலியை துகிலுரிந்தபோது என்ன செய்தார்கள். படைவீரர்கள் எப்படி இருந்தார்கள். இரண்டு வகையிலே இதில் சாமானியர் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒன்று பெருந்திரளாக. அவர்களுடைய மனம் செயல்படும் விதம் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் மாஸ் சைக்காலஜி நெரடியாக வரும் அபாரமான இடங்கள் உள்ளன. மழைப்பாடல் முதல் ஜராசந்தன் கதை வரை பல கோணங்களில் வருகிறது. கடைசியாக இப்போதுதுகிலுரிதலை அவர்கள் எப்படிப்பார்க்கிறார்கள் என்பது

இன்னொன்று தனித்தனியாக அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கிர்மிகன் கதை ஒரூ உதார்ணம். அவன் ஒரு மடையன். ஆனால் மடையர்கலின் உளவியல் சிறப்பாக அவன் வழியாக வெளிப்படுகிறது. அதேபோல சாமானிய வீரகள் சாமானிய மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்’

மகாபாரதத்தை ஒருபக்கம் வீரகதையாக பார்க்கும்போதே இந்த மக்கள் மனநிலையையும் சேர்த்துவாசிக்கவேண்டும்

பார்த்தசாரதி