ஜெ
சொல்வளர்காட்டின் முதல் அத்தியாயத்தில் உருவாகிவரும் ஆழமான குருசீட உறவு ஆச்சரியமானது. குருவை சீடர்கள் எதிர்கொள்கிறார்கள். மோதி விவாதித்து முன்னகர்கிறர்கள். அதே சமயம் சீடனை குரு அறிந்தும் இருக்கிறார். குரு சீடனுக்குச் சொல்லும் கடைசிச்சொற்கள் மிக குறிப்பிடத்தக்கவையாக உள்ளன
ஒரு குருவிலிருந்து சீடன் எந்த இடத்தில் எப்படி முரண்பட்டு விலகிச்செல்கிறான் என்பது முக்கியமான ஒரு இடம். ஆரண்யகங்களின் காலகட்டம்தான் இந்த உறுதியான குருகுலமுறை உருவாகிவந்ததாக இருக்கலாம். அதற்குமுன்னால் வேதங்களை கூட்டாக ஓதும் வழிமுறைதான் இருந்திருக்கவேண்டும்
உத்தாலகருக்கும் அவரது குருவுக்கும் அவரது மானவருக்கும் அல்லது மகனுக்கும் இடையே நிகழும் மொத்த விவாதத்தையும் ஒரே அத்தியாயத்தில் வாசிப்பதென்பது ஒரு பெரிய அனுபவம். கொஞ்சம் கடினமானதும்கூட
சந்திரமோகன்