ஜெ,
வெண்முரசு
வரிசை நாவல்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வாசிப்பதென்பது ஒரு அரிய இலக்கிய அனுபவமாக
இருக்கிறது. உதாரணமாக எங்கெல்லாம் புல் வருகிறது என்று பார்த்தேன். துரோணருக்கும் புல்லுக்குமான
உறவு ஒரு கதை. அதேபோல பரசுராமரின் மூதாதையர்
கதையிலும் எரியும்புல் ஒரு முக்கியமான கருவாக வருகிறது. கடைசியாக விஸ்வாமித்திரரின்
கதையும் புல்லின் கதைதான்.
இந்தக்கதைகளை
மட்டும் பிரித்து எடுத்துத் தொகுத்தால் வருவது வெவ்வேறு அர்த்தங்களை நோக்கி விரியக்கூடிய
ஒரு நல்ல நவீன நாவல் என்று நினைத்துக்கொண்டேன். புல் எந்த இடத்திலும் வளர்வது. ஆனால்
தர்ப்பை தீ உறைவது. அந்த குறியீடு இந்தக்கதைகளில் எப்படியெல்லாம் பின்னிவருகிறது என்று
வாசிப்பது ஒரு மிகப்பெரிய விஷயம்
செல்வராஜன்