Wednesday, July 27, 2016

உடல்மொழி



ஜெ

வெண்முரசு நாவலில் எப்போதும் நான் கவனிப்பது மனிதர்களின் பழக்கவழக்கங்களில் தெரியும் நுட்பம். அவர்கலின் உடல்மொழி வழியாக அவர்களின் உள்ளம் வெளிவருவது. அதில் உச்சகட்டம் என்றால் தன் மகலான துச்சளையை திருதராஷ்டிரர் தடவிப்பார்க்கும் இடம்தான். வெய்யோன் நாவலில்

இன்றைய அத்தியாயய்த்தில் பீஷ்மபிதாமகர் நிலையற்று இருப்பதன் அந்த உட்ல்மொழி மிக அழகாக வந்துள்ளது. அவரை கண்முன் பார்க்க முடிகிறது மெலிந்து நீண்ட டல் கொண்டவர் அமர்ந்திருக்கும் விதம். எதையும் கவனிக்கமுடியாமல் அவர் உள்ளம் பதறிக்கொண்டிருப்பது. அவரது தசைகளில் இருந்துகொண்டிருக்கும் பதற்றமான ஒரு நடுக்கம். எல்லாமே அற்புதமகா வந்துள்ளன

காட்சியாக இதைக் காட்டுவது ஏன் என்று என்ணிப்பார்த்தேன். அவர் துயோதன்னை அடித்தார் என்பது மட்டுமே போதும். ஆனால் அடிக்கும் காட்சியை கண்ணால் பார்க்கும்போது நாம் ஆசிரியன் நினைப்பதைவிட அதிகமாக விஷயங்களை ஊகிக்கமுடிகிறது

மகாதேவன்