Sunday, July 17, 2016

ரகசிய வைரம்



ஜெ

நான் பார்த்துக்கொண்டே வந்த ஒரு விஷயம் உண்டு. அதைப்பற்றி முன்புகூட ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்

அதாவது மனைவி இறந்தபின்னர் விதுரர் அவர் ஒளித்து வைத்திருந்த ‘அஸ்தினபுரியின் வைரத்தை’ எடுத்துப்பார்க்கிறாரா என்று. அது அஸ்வதந்தம். குதிரையின் பல். அதன் அர்த்தம் அவருக்கும் அவர் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று

ஆனால் எடுத்துப்பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அப்படியென்றால் அவர் மனைவி இருந்தபோதுமட்டும்தான் அவருக்கு அது முக்கியமானதாகத் தெரிந்தது.அவளுடன் அந்த வைரமும் அவருடைய ஆழத்துமனதிலிருந்து மங்கிப்போய்விட்டது

காதல் எப்படிப்பட்டதானாலும் ரொம்பச்சின்ன விஷயம் என்பதுதான் ஒரு வயதிலே நாம் உணரும் விஷயம். சொல்லிச்சொல்லி பெரிதாக்குகிறோம். வைரமும் அப்படித்தான். வெறும் கல்தானே அது?

அன்புடன்
சுந்தரம்