ஜெ
ஸ்வேதகேதுவின் கதையில் அவர் வேதமாணவர்கள் தேன் [மது அல்லது இனிப்பு] உண்பதற்கிருந்த தடையை நீக்கினார் என்பது சரித்திரம். ஆரண்யகங்களிலே உள்ள சேதி. அவர் காமநூல் எழுதினார் என்பது இன்னொன்று
அவர் அறிவால் வேதங்களை விளக்கலாம் என்று சொன்னார் என அதை விரிவாக்கி அனுபவத்துக்கும் அறிவுக்கும் இடையேயான உறவு வரை அதைக்கொண்டுசென்று உச்சத்திலே சாந்தோக்கிய உபநிஷ்தம் வரை கொண்டுசென்றிருப்பது பலமுறை வாசிக்கவைத்தது
அந்த வயல் அடைப்பது திறப்பது என்ன குறியீட்டு அர்த்தம் என்றுதான் கடைசி வரைபுரியவே இல்லை
சாமிநாதன்