Monday, July 18, 2016

காமத்தின் கதை












ஜெ

காண்டீபத்தைப்பற்றிக் குறைவாகவே பேசப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அதை அர்ஜுனனின் ஆண்மையின் அடையாளமாகவே நாவல் காட்டுகிறது. ஆகவே அவன் சென்ற பெண்களின் கதைகளாகவும் அவனுடைய காமத்தின் கதைகளாகவும் நாவல் விரிவடைகிறது. அவனுக்கும் சித்ராங்கதைக்கும் அவனுக்கும் உலூபிக்கும் அவனுக்கும் சுபத்திரைக்கும் இடையேயான உறவு மிகமிகச்சிக்கலானதாக இருக்கிறது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. உலூபி அர்ப்பணிப்புள்ளவள். சித்ராங்கதை நிமிர்வுள்ளவள். சுபத்திரை ஆணவம் உடையவள். இந்தப்பெண்களை அவன் அடைவதும் ஒவ்வொருவரிடமும் அவன் கொள்ளும் தயக்கமும் உரிமையும் வெவ்வேறுவகையானவை. சொல்லப்போனால் உலூபி மட்டுமே அவனுடைய உண்மையான மனைவியாக மனதுக்குள் இருக்கிறாள் என்ற எண்ணம் வந்தது.

அந்த நாவலின் உச்சமே அவன் வெவ்வேறு வடிவிலே பெண்களைப்பார்க்கும் அந்தக் குளக்கரைக்காட்சிதான். அது உருவக வடிவில் நாவலைத் தொகுத்துவிட்டது. நாவலை ஒட்டுமொத்தமாக வாசித்தபின் வாசிக்கவேண்டிய இடம் அது

 சுந்தரம் மகாதேவன்