ஜெ,
நீலம் நாவலில் எட்டு நாயகிகளின் பாவங்களும் ராதையிலேயே தோன்றி மறைவதை வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் சட்டென்று தோன்றியது இது. நான் இதை முன்பே உங்களுக்கு எழுதினேனா என்றே சந்தேகமாக இருக்கிறது
எனக்கு நீலம் ஒரு பாடல் ஒரு நடனம் அல்லது ரெண்டும் கலந்தது என்றே தோன்றிக்கொண்டிருந்தது. அதை ஒரு நாவலாக கதையாக நினைக்கவே முடியவில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்த அம்சம்தான். இதிலுள்ள இந்த நடனபாவனை.
இது கடைசியில்தான் உண்மையில் வருகிறது. ஆனால் முன்னாடியே அந்த பாவம் இருந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கூடவே ஐந்து திணைகளையும் கலந்திருப்பதும் அதற்கேற்ற நிலத்தையும் அளித்திருப்பதும் பெரிய ஒரு கனவை அளித்தன
ராஜாராம்