இன்றைய அத்தியாயத்தில் செளனகர், ஆயிரத்தவனைக் குறித்து எண்ணுவது எல்லாம் எத்தனை சரி!!!
அரசு கீர்மீகனைப்போல மூடர்களை prefer செய்வது அவர்கள் எந்த கேள்வியும் இன்றி அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்கள் என்பதும், அந்த ஆயிரத்தவனும் அவன் அருகில் இருக்கும் அந்த கண்கள் பளிச்சிடும் புத்திசாலி வீரனும், அமைச்சரும் அந்த மிக உணர்வு பூர்வமான சிக்கலான ஒரு கட்டத்தில் அவர்கள் பேசிக்கொள்வது எண்ணுவது தப்பிப்பது தவிப்பது கோபிப்பது போலி செய்வது என்று எத்தனை உணர்வுகளை சட் சட் என்று மாற்றி மாற்றி ஒரு குழப்பமும் இல்லாமல் நமக்கு புரிய வைக்கிறார்? அற்புதம் எத்தனை நுட்பமான உளவியல் சாத்தியங்கள் அவர் இன்று விவரித்தது?
ஆழ்த்தில் தன்னை மதிக்காதவனே கீழ்மையில் திளைத்து கீழ்மகனாகவே இருப்பதும் எத்தனை உண்மை. நான் வாழ்வில் சந்த்தித்து கொண்டே இருக்கும் பல மனிதர்களை இன்றைய பகுதியில் கண்டேன். ஜெ அவர்கள் சொன்னது போலவே கொல்லன் இடத்தில் இருக்கும் கருவிகளின் வடிவம் வேறு ஆனாலும் அவை செய்யும் பணி ஒன்றல்லவா? மகாபாரதாம் முடிந்து விட்டது, மானுடம் இன்னும் இருக்கிறது அதே கீழ்மைகளுடன் வேறு வேறு அடையாளங்களுடன் இன்றும்
லோகமாதேவி