ஜெமோ
சார்,
வெண்முரசின்
நுட்பமான ஒரு ஒத்திசைவை அதை முழுமையாகப்பார்க்கும்போதுதான் உணரமுடியும். சிலசமயம் அது
சட்டென்று மனதில் தோன்றுகிறது. விதுரர் சத்யவதியிடம் ஆரம்பத்தில் பேசும்போது ஒரு பெரும்போர்
நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதைச் சொல்கிறார். போர் நடந்தால்தான் பிரச்சினைகள்
தீரும் என்கிறார்
அதன்பின்
மைந்தர் பிறந்து தந்தை ஆனபோது போர் நடக்கக்கூடாது என நினைக்கிறார். போரைத்தவிர்க்க
போராடிக்கொண்டே இருக்கிறார். அதற்காக வருந்துகிறார். எதையும் செய்யத்தயாராக இருக்கிறார்
ஆனால்
இப்போது மீண்டும் போர் தேவை என்கிறார். போருக்கு அறைகூவுகிறார். போரினால் மட்டுமே எல்லாம்
சரியாகும் என்கிறார். இந்த மாறுதல்தான் அவரது கதாபாத்திரம். அதை விரிவாகப்புரிந்துகொள்ளும்போது
ஒரு பெரிய மன எழுச்சியை அடையமுடிகிறது
சாரங்கன்