Thursday, July 28, 2016

முரண்பாடு






அன்புள்ள ஜெ

பன்னிருபடைக்களம்தான் உச்சமான படைப்பு என்னும் எண்ணம் ஏற்பட்டிருந்தது ஏனென்றால் அதிலிருந்த செறிவு அபாரம். ஆனால் சொல்வளர்காடு மேலும் செறிவானது என்பது தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது. பலமுறை வாசித்தபின்னரே அதன் தத்துவச்சிக்கல்களை ஒருவாறாக உணரமுடிந்தது. அது வேதங்களின் சொல்லுக்கும் பொருளுக்குமான முரண்பாடு. இன்னொரு பக்கம் கர்மத்துக்கும் ஞானத்துக்குமான முரண்பாடு. வேதங்களை பயன்படுத்துவதற்கும் அறிந்துகொள்வதற்குமான முரண்பாடு.  அந்த மையத்தச்சுற்றித்தான் வெண்முரசு செல்லும் என நினைக்கிறேன்

சத்யமூர்த்தி