ஜெ
நீண்ட காலம் கழித்து கேரளத்தில் உள்ள துரியோதனனின் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஆபீஸ் விஷயமாகச் சென்றது. கொல்லத்திலிருந்து ஒரு காரில் கிளம்பிச் சென்றேன். அருகே சகுனிக்கும் பாண்டவர்களுக்கும் சின்னக்கோயில்கள் உள்ளன. தனித்தனியான உள்ளூர்க்கதைகளையும் சொன்னார்கள்
நாங்கள் போனபோது பூசாரி இல்லை. கோயிலை காலையிலேயே பூட்டிவிடுவார்கள். ஆனால் ஆளனுப்பியபோது வந்து காட்டினார்கள். முன்பு துரியோதனனைப்பற்றி வெண்முரசில் வாசித்துக்கொண்டிருந்தபோது எவ்வளவு கம்பீரமான மன்னன், அவனை கடவுளாகக்கும்பிடுவதில் தப்பே இல்லை என நினைத்தேன்
ஆனால் இப்போது வெண்முரசில் அவன் வன்மம் கொண்ட அரக்கனைப்போல வரும்போது மனம் மறுக்கிறது. ஆனால் எர்த விஷயமென்றாலும் அது உக்கிரமானதாக இருந்தால் கடவுளே என்பதுதான் நம் மனநிலை. ஆகவே துரியோதனனை கடவுளாக்கியதில் தப்பில்லை
ஆனாலும் என்னால் மனம் ஒன்றிகும்பிடமுடியவில்லை
ராஜாராம்