ஜெ,
வெண்முரசின் நாவல்களில் பன்னிருபடைக்களம் அபூர்வமான ஓர் அனுபவம். அதன் சாராம்சத்தைப்புரிந்துகொண்டு முழுமையாக எவரும் சமீபத்தில் எழுதுவார்கள் என நான் நினைக்கவில்லை. வெண்முரசைப்பற்றி பாராட்டி எழுதுபவர்களை பார்க்கிறேன். அவர்கள் பெரும்பாலும் அந்தந்தப்பகுதிகளையே சுட்டிக்காட்டி எழுதுகிறார். அவ்வப்போது சில எதிர்ப்புக்குரல்களும் காதில் விழுகின்றன. அவர்கள் இதைவிடமோசம். ஒன்றிரண்டு வரிகள் பகுதிகளைப்பிடித்துக்கொண்டு என்னவோ சொல்லிக்கொண்டிருகீறார்கள். ஒட்டுமொத்தமாக வெண்முரசு போன்ற ஒரு நாவலை அணுக ஒரு நீண்ட பன்பாட்டுப்பயிற்சியும் கிளாஸிக்கல் படைப்புகளில் கொஞ்சம் அறிமுகமும் தேவையாகிறது. அது இவர்களிடமில்லை.
இரட்டைத்தன்மை என்ற சரடு வந்துகொண்டே இருப்பதை வைத்து ஒருவகையாக பன்னிரு படைக்களத்தைத் தொகுத்துக்கொள்ளலாம். ரம்பகுரம்பன் முதல் கடைசியில் பாஞ்சாலியாகிய தேவி இரட்டையாக எழுவதுவரை. இங்கே ரக்தபீஜனைப்போல துரியன் வளர்கிறான். இவ்வாறு ஒரு வாசிப்பு ஒரு தொகுப்பை அளிக்கிறது. ஆனால் இப்படித் தொகுத்ததும் இதற்கு வெளியே உள்ளவற்றை எடுத்துவாசிக்கவேண்டிய அவசியம் உள்ளது. சிசுபாலன் இரட்டைத்தன்மையுடன் இல்லை. சிசுபாலன் ஒரே முகமாகத்தான் இருக்கிறான். சிசுபாலனுக்கும் அவன் அம்மாவுக்கும் இடையே உள்ல உறவு மிகப்பூடகமானது. அதேபோல ஜராசந்தனுக்கும் அவன் வந்த குகைக்குமான உறவு. இதையெல்லாம் கருத்தில்கொண்டு வாசிப்பவர்களே நாவலின் உண்மையான வாசகர்கள். அவர்கள் குறைவாகவே இருப்பாக்ரள்
உண்மையில் வெண்முரசு தமிழில் ஒரு புதிய ஜானரை அறிமுகம் செய்கிறது. அதை வாசிப்பதன் வழியாகவே அதைப்புரிந்துகொள்ளமுடியும்.
சாரதா