அன்புள்ள ஜெ
வெண்முரசின் மிக உக்கிரமனா இடம் என்று நான் நினைப்பது காந்தாரி தன் தங்கை சம்படையைப்பறிச் சொல்லும் இடம்தான். அவள் என்ன நினைத்தாள் என்பதே நாவல்களில் இல்லை. ஒரு அன்னைபோல அத்தனை தங்கைகளுக்கும் இருப்பவள் எப்படி சம்படையை மறந்திருந்தாள்?
ஆனால் அவள் மனதுக்குள் அவள் இருந்திருக்கிறாள். எங்கோ அந்த அக்கா அல்லது அன்னைமனம் குமுறிக்கொண்டே இருந்திருக்கிறது. அந்த வெளிப்பாடு இப்போது வெளிவருகிறது
மகாபாரதத்திலேயே இந்த குமுறல் இருப்பதை இதை வாசித்தபின்னர்தான் நான் போய் வாசித்தேன். ஆச்சரியம்தான். நாம் கதாபாத்திரங்களை டிவி பார்த்து டைப் ஆக யோசித்துவைத்திருக்கிறோம்
வடக்கே காந்தாரியின் மனக்குமுறலை மட்டும் தனியாக ஒரு பர்வமாக எழுதி அதை ஸ்திரீபர்வம் என்று சொல்கிறார்கள் என்று என் அக்கா சொன்னார்கள்
எஸ்