அன்புள்ள ஜெ
மழைப்பாடலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
சொல்வளர்காடு 15 முதல் வெளிவரும் என எழுதியிருந்தீர்கள். தாமதமாகிறது. எழுத ஆரம்பித்திருப்பீர்கள்
என நினைக்கிறேன். மழைப்பாடலில் விதுரரின் கதாபாத்திரம் உருவாகி வரும் அழகை வாசிக்கிறேன்.
அது வெளிவந்தபோது உருவான ஆச்சரியமெல்லாம் நினைவில் நிற்கிறது.
சத்யவதி உருவாகி வந்தபோது
எவ்வளவு பெரிய ராஜதந்திரி என நினைத்தேன். மழைப்பாடலில் விதுரர் ராஜதந்திரத்தின் உச்சம்
என நினைத்தேன். இதற்கும் அப்பால் ஒரு ராஜதந்திரியாக கிருஷ்ணனை எப்படி உருவாக்கமுடியும்.
அது பெரிய சவால் என்றே நினைத்தேன். கிருஷ்ணனும் அவனுக்குச் சமானமாக கணிகரும் உருவாகி விஸ்வரூபமாக நிற்கும்போது விதுரரைப்பார்த்தால்
ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இப்போதும் அதே அளவுக்கு ராஜதந்திரியாகத்தான் இருக்கிறர்.
ஆனால் மிகவும் சுருங்கி பின்னால் சென்றுவிட்டிருக்கிறார். அவரைவிடப்பெரிய ஆளுமைகள்
வந்துவிட்டிருக்கின்றன.
எஸ். ராகவன்