முழுமையற்ற உடலை காண்கையில் மானுட உள்ளம் எழுந்து அதை முழுமைசெய்து அடையும் கனிவால் அவர் அவன்மேல் பிறிதெவரிடமும் இல்லாத பேரன்பைக் கொண்டிருந்தார்.
என்ற ஒற்றை வரியை தனியாக வாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கும் ஒரு மகன் இருக்கிறான் அந்த வகையில். உண்மையில் ஏன் வளர்ச்சி இல்லாதகுழந்தையிடம் அத்தனை ஆவேசமான வெறியான அன்பு வருகிறது என்பது பெரிய ஆச்சரியமான கேள்விதான். அந்தக்கேள்விக்கான பதிலாக அமைந்திருக்கிறது இந்த வரி
செம்மணி அருணாச்சலம்