அன்புள்ள
ஜெ
நீலம்
நாவலில் இருக்கிறேன். நான் பலமுறை வாசித்த நூல் இது. இது ஏன் எனக்கு இப்படி வாசித்துத்தீராத
ஒன்றாக இருக்கிறது என்பதை நான் பலமுறை யோசித்துப்பார்த்தேன். எனக்குத்தோன்றிய ஒன்று
உண்டு. அர்த்தத்துக்கு முழுசாகக் கட்டுப்பட்ட உரைநடை என்பது பலவகையான லிமிட்டேஷன் உள்ளது.
அர்த்தமேகூட ஒருவகையான லிமிட்டேஷன் தான். அந்த அர்த்தம் நமக்கு வந்ததும் அது பொருளிழந்துவிடுகிறது.
ஆனால் இந்தமாதிரி அர்த்தம் தாண்டி உணர்வாகவோ பித்தாகவோ உள்ளமொழி கலைடாஸ்கோப் மாதிரி
கொஞ்சம் கை அசைந்தாலும் மாறிவேறு ஒன்றைக்காட்ட ஆரம்பிக்கிறது. அது அளிக்கும் பாஸிபிலிடிக்களுக்கு
அளவே கிடையாது. அது நம்மை ஒரு பெரிய மயக்கத்திலே வைத்திருக்கிறது. அது வெற்றுக்கனவு
இல்லை. ஒரு பெரிய அறிதல்நிலை. சொல்லி அறிவதையெல்லாம் சொல்ல எதுக்கு இலக்கியம்? சொல்லாமல்
அறிவதை உணர்வதுக்குத்தானே இலக்கியமெல்லாம் . சரிதானே?
பார்த்தா