வெண்முரசு' வெளியீட்டு விழாவில் தமிழின் சொல்வளம் குறித்து பேசினீர்கள். நிதர்சன உண்மை. 'தர்க்கம்' என்ற வார்த்தையின் பொருள் கூட உங்கள் blog இல் இருந்துதான் தெறிந்து கொண்டேன். என்னுடைய வகுப்பில் இருந்த ஒருவருக்கும் அதன் பொருள் தெரியவில்லை, அனைவரும் ஆங்கில வழி கல்வி தவிர பொறியியல் மட்டும் பயில்பவர்கள். நானும் தமிழில் சொற்பமாகவே படித்திருக்கிறேன், ஆனால் ஒரு கட்டுரையை படிப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது. இதுவே ஆங்கிலத்தில் இப்படி அல்ல, CAT, XAT, GMAT, Verbal Ability என்று ஏதேதோ பெயரில் ஆங்கில சொல்வளம் இன்றைய தலைமுறையினர் பெறுகின்றனர். தொடர்ந்து ஆங்கிலம் வாசிப்பவர்களுக்கு கூட தின செய்தித்தாள் புது வார்த்தையை கற்றுகொடுக்கிறது. உங்களது 'வெண்முரசில்' இருக்கும் சொல்வளம் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வட்டத்திற்குள் மட்டும் வளம் தரும், ஆனால் கட்டுரைகளிலும், உரைகளிலும், சொற்பொழிவுகளில் தமிழின் மறைந்து கொண்டிருக்கும் சொற்களுக்கு உயிர்கொடுக்கலாம்தானே?
கிரண் அஸ்வின்