இன்றைய பகுதி இளைய யாதவன் செய்த செய்யப்போகிற அனைத்திற்க்கும்
காரணத்தை அவன் தரப்பில் இருந்து விளக்கும் பகுதி. யாதவர்களின்
உட்பூசல்களுக்க்கான அடிப்படை அப்பூசல் எழும் விதம் சத்யபாமை செய்யும் பிழை
அந்த சுழலில் பலராமரின் விசை கிருஷ்ணனாக பாரதம் முழுதும் தன்னை நிகரற்றவனாக
எல்லா விதத்திலும் மேம்பட்டவனாக தன்னை நிலை நிறுத்த வேண்டிய தேவை
அனைத்தையும் தாண்டி இத்தனை விசைகளோடும் போராடும் ஒரு சாதாரண அரசனாக ஊழின்
ஒரு கன்னியாக அவன் இருப்பதை காட்டும் பகுதி.
சத்தியபாமை செய்யும் பிழை நுட்பமாக விவரிக்கப்பட்டிருந்தது.
கசையடி கொடுக்கப்படும் போது மௌனமாக ஏற்றுக்கொள்ளும் அந்த ஐவர் அவளை திகைக்க
செய்கிறார்கள் . அதற்க்கு மறு மொழி சொல்லி தலை வெட்டப்படுபவன் அவளின்
இயலாமையையே அவளுக்கு உணர்த்துகிறான் .
மிக முக்கியமான பகுதி. கிருஷ்ணனே தன் தரப்பை பற்றி சொல்வது இன்னும் அதிக வழு சேர்க்கிறது.