Friday, September 2, 2016

காழ்ப்பு



காழ்ப்பு தன்னளவிலேயே சுவைமிக்கது. மானுடன் தேடுவதென்ன? அவன் உள்ளத்தை மிச்சமின்றி நிறைத்து அவன் நாட்களை விரைவுகொள்ளச் செய்யும் ஒன்றுக்காகத்தானே? காழ்ப்பைப்போல அதை அளிக்கும் பிறிது எது?

என்று சகதேவன் கேட்கும் இடம் முக்கியமான ஒன்று. பலசமயம் காழ்ப்பையோ கசப்பையோ கண்டால் நாம் அனுதாபத்துடன் அதற்கான காரணங்களைத் தேட ஆரம்பிப்போம். உண்மையில் காழ்ப்புக்கு அப்படியெல்லாம் காரணங்கள் இருக்காது. அவர் பாதிக்கப்பட்டிருக்கவே மாட்டார். அது அந்த ஆளுமைக்கு ஒரு வகையான அர்த்ததை அளிக்கிறது. அவனை ஒரு ஆளாகக் காட்டுகிறது. அதற்காகவே அந்தக்காழ்ப்பு

இன்று இருவகையான காழ்ப்புகளும் வெளிப்படுவதை வெண்முரசிலே கண்டோம். கிருஷ்ணனின் எதிர்தரப்பாக அமையும் காழ்ப்பும் ஒருவகை. சும்மா ஒரு காழ்ப்பு. நானெல்லா, அந்தாள் மூஞ்சியிலேயே துப்பினவனாக்கும் தெரியுமா என்பதுபோல

ராஜசேகர்