Wednesday, July 6, 2016

வீரனும் வேதாந்தமும்






ஜெ, 

பீமன் அத்தனை முக்கியமான இடத்தில் மேலெழுந்து வருகிறான். கிருஷ்ணனின் செய்தியை முதலில் அவனே முழுமையாகப்புரிந்துகொள்கிறான் ஏன் என்று வெண்முரசு சொல்கிறது. அர்ஜுனன் காமத்தாலும் அதற்குரிய சஞ்சலகங்களாலும் ஆட்பட்டிருக்கிறான். தருமன் அறச்சிக்கல்களில் மாட்டியிருக்கிறான். கூடவே அகங்காரமும் ஓங்கியிருக்கிறது. ஆனால் பீமன் தூயவனாகவே இருக்கிறான். அது கள்ளமற்ற காட்டுமிராண்டியின் மனத்தூய்மை. அந்த தூய்மையினால்தான் அவன் அந்தத்தருணத்தில் அறச்சீற்றத்துடன் எழுந்து வரமுடிகிறது. அப்படி வந்தபின்னர்தான் வேதாந்தமே அவனுக்குப்புரிகிறது. 

அவனே மகாபாரதத்தின் நாயகன். மாவீரர்களுக்குத்தான் வேதாந்தம் எளிதில்புரியும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். அர்ஜுனன் மாவீரன். ஆனால் அவனைவிட சுத்தவீரன் என்பவன் பீமனே
சுவாமி