ஜெ
வெண்முரசில் இரண்டுவகையான உவமைகள் வருகின்றன. ஒன்று ரொமாண்டிக்கான உவமைகள்.
கற்பனையால் மேலே போய்த்தான் அவற்றை நம்மால் ரசிக்கமுடிகிறது. இன்னொருவகையான உவமை என்பது
மிகமிக யதார்த்தமான உவமை.
பெண்களை
நாம் விரும்புவது
ஆடைகளை
விரும்புவது போல
அணிமிக்கதாயினும்
பெருமதிப்புகொண்டதாயினும்
நமக்குப் பொருத்தமான ஆடையே நம்மை கவர்கிறது.
நல்ல
ஆடை என்பது
நம்மில்
ஒரு பகுதியென்றாவது.
நம்மை
நாம் விழையும்படி காட்டுவது.
நம்
குறைகளை மறைத்தும்
நிறைகளை
மிகையாக்கியும் சமைப்பது
என்று யயாதி சொல்கிறான். இந்த உவமை இரண்டாம்வகையானது. நான் ஆங்கிலம் எம்.ஏ படித்தவன்.
[செய்யும்வேலைக்குச் சம்பந்தமே இல்லை அது வேறு விசயம்] அப்போது படித்த ஞாபகத்தில் இந்த
இரண்டாவது வகையான உவமைதான் உண்மையில் கிளாஸிக்கலானது என நினைக்கிறேன்
எஸ் சந்தானம்
அன்புள்ள சந்தானம்
இந்தியச்செவ்வியலில் இருவகை உவமைகளுக்கும் இடமுண்டு. சிலப்பதிகாரத்தில் இரண்டாம்வகை
உவமைகள். கம்பனில் முதல்வகை மட்டுமே
ஜெ