Friday, May 5, 2017

புலிக்குட்டி





ஜெ

புலி என்ற படிமம் தேவயானியை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. புலியின் கோடுகள் தீபோன்றவை. ஆகவே புலி தீயாகவும் சொல்லப்படுகிரது. அவள் புலிப்பால் குடித்தவள். அவளுடைய புலி கசனை உன்கிறது. அழிந்து மீண்டும் பிறக்கிறது. சாயையாக உடன் இருக்கிறது. சாயையை புலி உண்பதுகூட ஒரு அடையாளம்தான் கடைசியில் அவள் புலிநிறைந்த குடிலில் இருக்கிறாள். அப்பகுதியே புலிகளால் தீப்பற்றி எரிகிறது என்பது முக்கியமான வரி

ஆனால் மிகமுக்கியமான இடம் என்பது ஒரு சின்னபுலிக்குட்டியை தேவயானி பார்க்கும் இடம்தான். அது தன் சிறிய நகங்களால் அவள் ஆடையைப்பற்றிக்கொள்கிறது என்பதுதான்

தேவ்