அன்பு ஜெமோ சார்,
அணிகளும் சாயையும் தேவயானியின் வாழ்வில் பருப்பொருளாய் நுழைவது ஒரே தருணம்.சாயையின் வருகைக்குப் பின்னும், மறைவிற்குப் பின்னுமான தேவயானியின் நிலைப்பாடு கவனிக்க வேண்டியது.
கணிகரின் வருகைக்குப் பின்பு சகுனி, விப்ரரின் மறைவுக்குப் பின் திருதா, மாயையின் பிரிவுக்குப் பின் வரும் மாமலர் திரௌபதி நினைவுகூரப் பட வேண்டியவர்களே.
மரணஅடி தந்த பின் தவறுகளைக் கண்டுகொள்ளாத உறவுகளின் உளவியலை அன்றாட வாழ்வில் காணவே செய்கிறோம். உடலால் வன்முறையைக் கையாண்ட பின் சர்மிஷ்டையின் கரவு வாழ்வை சாயை தேவயானியிடம் மறைப்பது, வாரணவதம் மற்றும் காம்பில்யப் போர் நிகழ்வுக்குப் பின் துரியனைத் தாக்கிய பின் திருதாவின் திரிபு, பன்னிருபடைக்கள நிகழ்விற்குப் பின் துரியனைத் தாக்கிய பின் பீஷ்மர் வலிந்து கொள்ளும் அமைதி நேர்க்கோட்டில் நிற்கின்றனவோ?
சிவமீனாட்சி.