Tuesday, May 2, 2017

சரியான வாசிப்புதானா





ஜெ,

நான் வெண்முரசு நாவல்களை தொடர்களாகவே வாசித்திருக்கிறேன். திடீரென்று அது சரியான வாசிப்புதானா என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால் என் அம்மாவும் வெண்முரசு வாசிக்கிறார்கள். சென்ற பத்துநாளில் அவர்கள் மாமலரை வாசித்து நான் வாசிக்கும் இடம் வரை வந்தார்கள். அவர்கள் சொன்ன கதைக்கும் நான் சொன்னகதைக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு பத்து அத்தியாயங்களை வைத்துத்தான் மாமலரை புரிந்துகொண்டேன். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரே கதை. அதாவது தாரையும் தேவயானியும் ஒரே குணம் கொண்டவர்கள் என்று சொன்னார்.  புரூரவஸும் யயாதியும் ஒரே குணத்தில் இரண்டுபெர் என்றார்கள். அவர்கள் நவீன இலக்கியம் வாசிப்பவர் அல்ல. அவர்கள் வாசிப்பதெல்லாம் புராணம் மட்டும்தான். ஆனால் அவர்கள் அடைந்த அந்த நுண்ணுக்கமான வாசிப்பு எனக்கு அமையவில்லை. ஒட்டுமொத்தமாக வாசித்தால்தான் இதன் ஃபார்ம் பிடிகிடைக்கும் என நினைக்கிறேன்

டி.எஸ்.செல்வக்குமார்