ஜெ
நான்கு நிழல்களுடன்
நான்கு தேவியரும் கனவில் மீண்டும் வருகிறார்கள். அங்கே அவர்கள் தருமன், அர்ஜுனன், நகுலன்
சகதேவன் ஆகியோருக்கு அவர்கள் முதன்மையாக எந்த வடிவில் இருக்கிறார்களோ அந்தவடிவில்.
அவர்களை எப்படி அத்தோற்றங்கள் மடியில் வைத்திருக்கின்றன எப்படி கூடவே வதைக்கவும் செய்கின்றன
என்பதைக் காட்டும் பகுதி இது என நினைக்கிறேன்.சரியா என்று தெரியவில்லை. இது என் வாசிப்பு.
கூடவே ஐவரும் கற்பனையில்
பிறஐவருமாக ஆகிறார்கள் என்பதனால் பீமனே ஐவருமாக ஆகி அதை அறிந்திருக்கிறான். ஐந்து வடிவங்களிலும்
ஐந்துபேரையும் அவளும் அறிந்திருக்கிறாள். மிகச்சங்கடமான ஆனால் ஆழமான ஒரு இடம் இது.
இந்த ஐந்து திரௌபதியும் ஐந்துபேரின் மனைவிகள் என நான் முன்னரே ஊகித்திருந்தேன். ஐந்துவகை
பெண்வெளிப்பாடுகள் என இப்போது நினைக்கிறேன். கொஞ்சமாக க்ளூ கொடுத்துச் சென்றுவிட்டீர்கள்.
துணிந்து மேலே சென்று யோசிக்க ஒரு திராணிதேவை
ஜெகன்