ஜெமோ,
முதன்முதலாக சென்னை வெண்முரசு விவாத கூட்டத்தில் இந்த மாதம் கலந்து கொணடேன். வெகுநாட்களுக்குப் பிறகு முற்றிலும் புதியவர்களுடன், கிட்டத்தட்ட 25 பேர்,
இருந்தது இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருக்கும் அனுபவத்தை தந்தது. முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், இயல்பாகவே புன்னகைக்கத் தோன்றியது. ஏதாவது ஒன்று அனைவருக்கும் பொதுவாக இருக்கும் போது இயல்பாகவே அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. ஸ்டேடியத்தில் கிரிக்கெட், சதானந்தா யோகா Centerல் நீங்கள்.
கூட்டம் வடபழனியில் என்பதால், நான் வசிக்கும் சின்னமலையில் இருந்து செல்ல மெட்ரோ இரயில் வசதி உண்டு. மாலை 4 மணிக்கும் வெயில் ஜுவாலை இல்லா நெருப்பாக சுட்டெரித்தது. 40 ரூபாய் செலவில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் சில்லென்ற ஒரு பயணம். வெம்மை முற்றிலும் குறைந்தது. 15 நிமிடங்களிலேயே வடபழனி ஸ்டேஷனை அடைந்து, அடுத்த 5 நிமிட நடையில் சதானந்தா யோகா Centerஐ கண்டடைந்தேன்.
விவாதம் மேல்மாடியில். நீண்ட செவ்வக அறை. தரை முழுவதும் தண்ணீர் தெளிக்கப்பட்டு அனைத்து ஜன்னல்களும் திறக்கப்பட்டு மின் விசிறிகள் மூன்றும் மித வேகத்தில் சுழல விடப்பட்டிருந்தன. That moment, something told me, the stay and discussion here for another 3 hours is going to be very pleasant. A very thoughtful preparation of the room to beat the heat. "செய்வனத் திருந்தச் செய்" பழமொழி ஞாபகத்தில் வந்தது.
ஐந்தே கால் போல் அறை நிரம்பியிருந்தது. காளிராஜ் தன்னுடைய smart phoneல் எடுத்த இந்திர நீலம் நாவல் பற்றிய குறிப்புகளுடன் உள்ளே நுழைந்தார். அந்நாவலை கிருஷ்ணனின் அரசியல், புராணம் மற்றும் சேமகந்தமணி என மூன்று பகுதிகளாக பிரித்து அருமையாக தொகுத்துரைத்தார். தொய்வு ஏற்படும் தோறும் ராஜகோபாலும் (அது தான் அவர் பெயர் என்று நினைக்கிறேன்) சௌந்தரும் pitched in.
கிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கியதில் உள்ள உங்கள் புனைவை, நம் உடம்பிலுள்ள ஏழு யோகச்சக்கரங்கள் தான் காளைகளாக உருவகிக்கப்பட்டுள்ளது என சௌந்தர் decode செய்தது ஏற்கனவே இந்திர நீலம் படித்தவர்களுக்கு ஒரு wow!!! moment.
ஒவ்வொரு மாற்றத்தையும், அதற்கு காரணமான போரையும் நியாயப்படுத்துபவை சித்தாந்தங்களும் அது உருவாக்கும் கருத்தியல்களும் தான் என பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் இருந்து நான் தொகுத்துக் கொண்டது. அதையே "text " என ராஜகோபால் உருவகித்தது எனக்கொருwow!!! moment. கிருஷ்ணர் மகாபாரதப் போரை நியாயப்படுத்த உதவிய “text“ வேதாந்தம் என்றது இன்னொரு wow!!! moment.
கடைசியாக ஒவ்வொருவரின் சுய அறிமுகம் தொடங்கியது. பல்வேறு தரப்பட்ட வாசகர்கள். இரண்டு மாதங்களிலிருந்து 15 ஆணடுகளாக உங்களை வாசிக்கும் ஒரு கலவையான கூட்டம் அது.
விவாதம் முடிவுற்று கிளம்பும் போது, எழுத்தாளர் இபா உங்களைப் பற்றி சிலாகித்த "ஜெமோவால் எப்படி எழுத்தை இலக்கியத்தை ஒரு இயக்கமாக ஆக்க முடிகிறது?" என்ற நினைவுகளை அசை போட்டுக்கொண்டே வடபழனி மெட்ரோ இரயில் ஸ்டேசன் நோக்கி நடந்தேன்.
அன்புடன்
முத்து