Thursday, May 11, 2017

அச்சுவை





உள்ளும் புறமும் சுவைஎன்றான் பீமன் தன் கைகளை நக்கியபடி. “ஆம், குருதிபோல. கொழுங்குருதியும் இதைப்போலவே சுவைகொண்டது என்பார்கள்என்றான் முண்டன். பீமன் தலைதூக்கி நோக்கினான். “அச்சுவையும் அறிந்து மீள்க!” என்றான் முண்டன் அவன் விழிகளை நோக்கியபடி.

பீமனிடம் முண்டன் சொல்லும் இந்த வரிகளை ஒரு அதிர்ச்சியுடந்தான் வாசித்தேன். தேனை நக்கி நக்கி குடித்து களிகொள்கிறான். சுவையே உருவானவன் பீமன். ஆனால் அவன் தான் நாளை போர்க்களத்தில் குருதிகுடிக்கப்போகிறான்.

அச்சுவையையும் அறிந்தபின் தேன் சுவையை முழுமையாக ருசிக்க கிளம்பி வா என்று அவனிடம் அனுமன் சொல்கிறான். போகிற போக்கில் வந்தாலும் எவ்வளவு கூர்மையான வரிகள்

செல்வா