அன்புள்ள ஜெ
மாமலரின் அத்தியாயங்களை
நோக்கி ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய தாகத்துடன் வந்துகொண்டிருந்தேன். இதன் சாராம்சம் என்ன
என்று ஆரம்பத்தில் ஒரு புரிதல் இருந்தது. அது மெய்யான காதலைச் சுட்டிக்காட்டும் என
நினைத்தேன். ஆனால் அன்பு என்றால் என்ன மனிதர்களுக்குள் உள்ள உறவு என்றால் என்ன என்றெல்லாம்
கேட்டுக்கொண்டே சென்றது. பல இடங்களில் முட்டியும் மோதியும் குழம்பியும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
அதில் எனக்கு முக்கியமானதாகப்பட்டது
அந்தக்குரங்குகள். அவை காட்டும் அன்புக்கு என்ன பொருள்? அதன்பொருள் இயற்கைக்குத்தான்
தெரியும். ஆனால் எவ்வளவு தூய்மையான அன்பு.
எவ்வளவு சந்தோஷம். வன்மம் பொறாமை கசப்பு ஒன்றுமே இல்லை. இந்தத்தேடலின் பின்னணியில்
அந்த குரங்குகள் வந்துகொண்டே இருப்பது மிகப்பெரிய ஓர் அறிவுத்தரிசனமாக எனக்குப்பட்டது
செந்தில்