அன்புள்ள ஜெ,
மாமலரில் இருந்து மழைப்பாடல் நோக்கி ஒரு பயணம் உள்ளது. அதை நான் தற்செயலாகவே
கண்டுபிடித்தேன். மழைப்பாடலில் யது கிளம்பிச்சென்று பாலைநிலத்தைக் கண்டடைந்து அங்கே
ஒரு யாதவச் சமூகத்தை அமைக்கும் விரிவான கதை உள்ளது. அதன்பின் எப்படியெல்லாம் யாதவச்
சமூகத்தின் வரலாறு பல்வேறு கிளைகளாகப்பிரிந்து வளர்ந்தது என்பது சொல்லப்படுகிறது.
யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி வந்தான். அஸ்தினபுரியின் கங்கையைக் கடந்து, மச்சர்கள் ஆண்ட யமுனையைக் கடந்து, மாலவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காகச் சென்றான் [http://www.jeyamohan.in/47091#.WRqOKdzhXVI]
அதேபோல துர்வசு தன் ஆதரவாளர்களுடன் கிளம்பிச்சென்று காந்தார
அரசை அமைப்பதும் மழைப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது
” சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான்.”
இந்த
இரண்டு கதைகளும் மிகச்சரியாக மாமலர் முடிந்த இடத்திலிருந்து ஆரம்பித்து வளர்கின்றன.
இந்த சுழற்சியை ஒரு அற்புதமான புனைவு என்று சொல்வேன். அதைக்காட்டிலும் ஒரு வரலாறு என்றுதான்
நம்பத்தோன்றுகிறது.
ராகவன்
மகாதேவன்