ஜெ,
மாமலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அர்த்தப்படுகிறது.
ஆனால் அது மானசீகமான பேரன்பின் அடையாளம். அது எங்கே இருக்கிறது என்று எல்லாரும்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவகையில் கண்டடைகிறார்கள். ஆனால் கண்டடைபவர்கள் எல்லாரும்
அவர்களின் ஆசைகளைத்தான் கண்டடைகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது எனக்குத் தோன்றியது.
கதையிலே இது இருக்கிறதென்று அர்த்தமில்லை. தவறாக நினைக்கவேண்டாம்.
அதாவது பீமன் அந்த
மலரில் கண்டடைவது முலைப்பாலின் மணத்தைத்தான். அது பல்வேறு வரிகளின் வழியாக தெரியவருகிறது.
அதேபோல பாஞ்சாலி கண்டடைவது அவள் அப்பாவின் மணம். சின்னவயசில் அவள் அடைந்த மணம். இரண்டுமே
ஓரளவு பயலாஜிக்கலான ஒரு அடிப்படை நோக்கிச் செல்கின்றனவா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
இப்படியெல்லாம் வாசிக்க இடமிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்
மோகன் ராமசுந்தரம்