ஜெ
தேவயானிக்கு வரும் மர்மமான கனவு [மாமலர் 64] வெண்முரசுக்கே ஒரு பெரிய திறப்பை
அளிக்கிறது. எதிர்காலத்தில் பிறக்கப்போகும் அம்பை அவள் கனவில் வந்து எதிர்காலத்தில்
பிறக்கப்போகும் பீஷ்மரின் வடிவமாக இன்றைக்கு இருக்கும் யயாதியை அழிக்கச் சொல்கிறாள்.
தேவயானியால் அதைச்செய்ய முடியவில்லை. அங்கிருந்து மகாபாரதப்போரை நடத்திய அந்த வன்மம்
ஆரம்பிக்கிறது
அப்படிப்பார்த்தால் முதற்கனல் யார்? அம்பை அல்ல. தேவயானி. ஆனால் தேவயானி கூட
இல்லை. அவளுடைய அன்னையாகிய ஜெயந்தியும் அவள் அன்னையாகிய இந்திராணியும் பெரும் வஞ்சம்
கொண்டவர்களாக இருக்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கிறது எல்லா கோபங்களும்
தேவயானி அம்பை திரௌபதி என ஒரு முக்கோணம் மாமலருக்குப்பின்னால் உருவாகி வந்துவிட்டது.
அதுதான் வெண்முரசின் அடிப்படைக்கட்டமைப்பு என தோன்றுகிறது
மனோகரன்